ரஷ்ய துறைமுகம் மீது தாக்குதல்
25 புரட்டாசி 2023 திங்கள் 09:56 | பார்வைகள் : 5612
உக்ரைன் ரஷ்யா இடையில் போர் நடைபெற்று வருகின்றது.
தற்போதைய மிகப்பெரிய போர் நிகழ்வாக ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவின் செவாஸ்டோபோல் துறைமுகம் மீது உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதல் பார்க்கப்படுகிறது.
கருங்கடலின் கடற்படை துறைமுக தலைமையகம் மீது உக்ரைன் நடத்திய இந்த தாக்குதலுக்கு பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளிடம் இருந்து பெறப்பட்ட ஸ்ட்ரோம் ஷடோ ஏவுகணைகள் (Storm Shadow missiles) பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
sevastopol-satellite-image-after-ukraine-attack:ரஷ்யா மீதான உக்ரைனின் ஏவுகணை தாக்குதல்: வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்கள்
இந்நிலையில் கருங்கடல் கடற்படையின் செவாஸ்டோபோல் துறைமுகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் விளைவாக 9 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
16 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் கிரில் புடானோவ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கருங்கடலின் செவாஸ்டோபோல் கடற்படை துறைமுக தலைமையகம் மீதான தாக்குதலுக்கு முந்தைய மற்றும் தாக்குதலுக்கு பிந்தைய செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 22ம் திகதி நடைபெற்ற இந்த சம்பவத்தின் செயற்கைக்கோள் புகைப்படங்களை பிளானட் லேப் என்று நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.