Paristamil Navigation Paristamil advert login

விசித்திரமான மத வழிபாட்டு...  சிக்கி தவிக்கும் 1500 சிறுவர்கள்

 விசித்திரமான மத வழிபாட்டு...  சிக்கி தவிக்கும் 1500 சிறுவர்கள்

25 புரட்டாசி 2023 திங்கள் 10:03 | பார்வைகள் : 4959


பிலிப்பைன்ஸ் நாட்டவரான Jey Rence B Quilario என்பவர் உருவாக்கிய விசித்திர குழுவிடம் தற்போது 1,500 சிறார்கள் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Save The Children என்ற அமைப்பு அந்த சிறார்களை மீட்க களமிறங்கியுள்ளது.

அத்துடன் Quilario என்ற அந்த நபர் போதை மருந்து தயாரிக்கும் ஆலை ஒன்றையும் நடத்தி வருவதாக செனட்டர் ரொனால்ட் டெலா ரோசா குற்றம் சாட்டியுள்ளார். 

பல்வேறு தலைவர்கள் இந்த விவகாரத்தில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட சிறார்களை மீட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

பலாத்காரம், பாலியல் வன்கொடுமை, சிறார் துஷ்பிரயோகம் உள்ளிட்ட கொடுமைகளை அரங்கேற்றும் ஒரு வழிபாட்டு முறை உண்மையில் சட்டத்திற்கு விரோதமானது என குறிப்பிட்டுள்ள செனட்டர் ஒருவர், 

சிறார்களுக்கு கட்டாயத் திருமணம் போன்ற கொடுமைகளை அரசாங்கம் வேடிக்கை பார்ப்பது முறையல்ல முறையிட்டுள்ளார்.

ஆயிரக்கணக்கான சிறார்களை பாலியல் அடிமையாக கொண்டுள்ள ஒரு குழு அது, அதன் தலைவர் மீது உடனடி நடவடிக்கை தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஆபத்தான ஒரு நபரின் கைகளில் தற்போது சிறார்கள் சிக்கியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த குழுவானது தொடக்கத்தில் பொதுமக்களுக்கு சேவை செய்யும் ஒரு அமைப்பாகவே இயங்கி வந்துள்ளது. 

ஆனால் 2017ல் Omega de Salonera என பெயர் மாற்றம் செய்யப்பட்டதுடன், விசித்திரமான மத வழிபாட்டு குழுவாகவும் மாறியது.

, தங்கள் குழுவில் இணைந்து கொள்ளாதவர்கள் நிலநடுக்கத்தில் சிக்கி கொல்லப்படுவார்கள் எனவும் விளம்பரம் செய்தது. 

தற்போது முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் அந்த குழு நிராகரித்துள்ளதுடன், சிறார்களை பாலியல் அடிமைகளாக பாதுகாத்து வருவது என்பது வெறும் கற்பனை எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த குழுவில் தற்போது 1,580 சிறார்கள் உட்பட 3,500 உறுப்பினர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்