நைஜீரியவில் பாரிய தீ விபத்து! இரு குழந்தைகள் உட்பட 34 பேர் பலி
25 புரட்டாசி 2023 திங்கள் 10:44 | பார்வைகள் : 4908
நைஜீரிய பெனின் (Benin) எல்லை பிராந்திய எண்ணெய் சேகரிப்பு நிலையத்தில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக இரு குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
எரிபொருள் சேகரிப்பு நிலையத்தை சூழவுள்ள பிரதேசங்களில் பல தீப்பிழம்புகள் வெடித்ததாகவும் அதனை தொடர்ந்து கரும்புகை அதிக அளவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீப்பரவலில் பலர் காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியாக நைஜீரியா அதிக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாட்டில் இருந்து எரிப்பொருட்களை சட்டவிரோதமாக மக்கள் கடத்தி சென்று விற்பனையில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக எரிபொருட்களை கடத்தல்காரர்கள் எல்லை தாண்டி ஏனைய அயல் நாடுகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்கின்றனர்.
உரிய பாதுகாப்பினை அவர்கள் பேண தவறுவதனால் தீப்பரவல்கள் அதிக அளவில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.