Whatsapp-ன் புதிய update
25 புரட்டாசி 2023 திங்கள் 12:18 | பார்வைகள் : 4269
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்-அப், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனம் அடிக்கடி புதிய அப்டேட்களை அதன் பயனாளர்களுக்கு வழங்கி வருகிறது.
தற்போது வழங்கப்பட்டுள்ள அப்டேட் பலரும் எதிர்பாராததாக அமைந்துள்ளது.
ஏற்கனவே வாட்ஸ் அப்பில் Payment என்ற option உள்ளது. இதில் பயனர்களின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது யுபிஐ செயலிகள் அறிமுகமாகிறது.
அதாவது, கூகுள் பே, போன் பே, பேடிஎம், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகள் மூலம் வாட்ஸ் அப்பில் பணப் பரிமாற்றம் செய்து கொள்ளும்படியான அம்சம் வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஏற்கனவே இந்த அம்சம் சிங்கப்பூர் மற்றும் பிரேசிலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.