Paristamil Navigation Paristamil advert login

ஜேர்மனிக்கு பயணிக்க தயாராகும் ரணில்

ஜேர்மனிக்கு பயணிக்க தயாராகும் ரணில்

25 புரட்டாசி 2023 திங்கள் 15:17 | பார்வைகள் : 7666


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளைய தினம் ஜேர்மனிக்கு செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் காலநிலை மாற்றம், அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு உலகளாவிய தீர்வுகளை காணும் நோக்கில் ஜேர்மனியில் இடம்பெறவுள்ள பேர்லின் கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜேர்மனிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான விஜயத்தை நிறைவு செய்து நேற்று காலை நாடு திரும்பியிருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி தொடர்பான முதலாவது மீளாய்வின் இறுதிக் கலந்துரையாடல் நாளைய தினம் இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் கலந்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜேர்மனி நோக்கி பயணமாவார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விஜயத்தின் போது ஐரோப்பிய பேரவையின் தலைவர் சார்ல்ஸ் மைக்கல் பெல்ஜியத்தின் பிரதமர் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்