Paristamil Navigation Paristamil advert login

ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்த சிவகார்த்திகேயன்..

ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்த சிவகார்த்திகேயன்..

25 புரட்டாசி 2023 திங்கள் 16:14 | பார்வைகள் : 8153


தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஏஆர் முருகதாஸ். கடந்த சில வருடங்களாக எந்த படங்களும் இயக்காமல் இருந்தார். விஜய் நடிக்கும் படத்தை இயக்கவிருந்த நிலையில் அந்த படம் ட்ராப் ஆனது. அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க போகிறார் என்று செய்திகள் வெளியானது. அதை உறுதி செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இன்று(செப்., 25) முருகதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன், ‛‛எனது 23வது படத்திற்காக உங்களுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் எனக்கு எல்லா அம்சங்களிலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். மேலும் படப்பிடிப்பை தொடங்க நான் காத்திருக்க முடியாது. மிக்க நன்றி சார், மீண்டும் ஒருமுறை இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சார்,'' என தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்