Paristamil Navigation Paristamil advert login

எங்கே போனாள் 15 வயதான Lina. கண்ணீர் மல்க தேடும் தாய்.

எங்கே போனாள் 15 வயதான Lina. கண்ணீர் மல்க தேடும் தாய்.

25 புரட்டாசி 2023 திங்கள் 19:39 | பார்வைகள் : 10162


கடந்த சனிக்கிழமை காலை 11:00 மணிக்கு எனது மகள் Lina எங்கள் வீட்டில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள Saint-Blaise-la-Roche தொடரூந்து நிலையம் நோக்கி சென்றாள் Strasbourg நகருக்கு செல்ல, அவள் சாம்பல் நிறத்தில் ஆடையும், வெள்ளை நிறத்தில் மேல் அங்கியும், வெள்ளை நிறத்தில் சப்பாத்தும் அணிந்திருந்தாள், தோள்பட்டை வரை வெட்டப்பட்ட பொன்னிற முடியையும் கொண்டவள். ஆனால் அவளைக் காணவில்லை, எனக்கு என் மகள் வேண்டும்" என Lina வின் தாயார் ஊடகங்களில் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த காவல்துறையினர் Lina காணமல் போன நாளிலிருந்து நாங்கள் தீவிரமாக தேடிவருவதுடன், விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளோம். முதல் கட்ட விசாரணையில் Lina அன்றையதினம் Saint-Blaise-la-Roche தொடரூந்து நிலையத்தில் இருந்து Strasbourg செல்லும் தொடரூந்தில் பயணிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரியவருகிறது. என தெரிவித்துள்ளனர்.

மோப்பநாய்கள், உலங்கு வானூர்திகள் என பல வழிகளில் தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் இறங்கியுள்ள நிலையில் தன்னார்வ தொண்டு செயல்பாட்டாளர்களும் சிறுமியைத் தேடும் பணியில் இறங்ங்கியுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

160 cm உயரமும் 49 kg எடையும்  பச்சை நிற கண்கள் உடைய Linaவைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் 03 88 97 04 71 என்னும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்