Paristamil Navigation Paristamil advert login

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட்: வெற்றி பெற்ற இந்திய அணி

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட்: வெற்றி பெற்ற இந்திய அணி

26 புரட்டாசி 2023 செவ்வாய் 07:51 | பார்வைகள் : 5594


ஆசிய விளையாட்டு போட்டிகள் மகளிர் கிரிக்கெட்டின் இறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றுள்ளது.

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிர் கிரிக்கெட் போட்டிக்கான இறுதி போட்டி இன்று நடைபெற்றது.

இந்த போட்டியானது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களான ஸ்மிருதி மந்தனா 46 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளுடன் 116 ரன்களை இந்திய அணி பெற்றது.

பின்பு, விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளுடன் 97 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில், 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தங்கம் வென்றது. இலங்கை அணி வெள்ளி பதக்கத்தை உறுதி செய்தது.

இதன்மூலம், 2 தங்கப்பதக்கங்களுடன் இந்தியா 11 பதக்கங்களை வென்றுள்ளது.   

வர்த்தக‌ விளம்பரங்கள்