50 ஓவர் உலகக்கோப்பைக்கான பரிசுத்தொகை அறிவிப்பு!
23 புரட்டாசி 2023 சனி 08:20 | பார்வைகள் : 3352
இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான பரிசுத்தொகை குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
மாதம் இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.
இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகள் விளையாடுகின்றன.
இந்த நிலையில் உலகக்கோப்பைக்கான பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது.
இதன்படி கோப்பையை வெல்லும் அணிக்கு 4 மில்லியன் டொலர்கள் (ரூ.33 கோடி இந்திய மதிப்பில்) கிடைக்கும்.
இறுதிப்போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு 2 மில்லியன் டொலர்கள் (ரூ.16 கோடி) கிடைக்கும்.
அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு தலா 8 லட்சம் டொலர்கள் அளிக்கப்படும்.
குரூப் ஸ்டேஜ்-யில் வெளியேறும் அணிகளுக்கு தலா ஒரு லட்சம் டொலர்கள் அளிக்கப்படும்.
அதேபோல் குரூப் ஸ்டேஜ்-யில் ஒவ்வொரு வெற்றிக்கும் ஒவ்வொரு அணியும் தலா 40,000 டொலர்கள் பெறும்.