Paristamil Navigation Paristamil advert login

 ரொனால்டோவின் இரட்டை கோல்.... 

 ரொனால்டோவின் இரட்டை கோல்.... 

23 புரட்டாசி 2023 சனி 10:12 | பார்வைகள் : 5480


அல்-அஹில் சவுதி அணிக்கு எதிரான போட்டியில் அல் நஸர் அபார வெற்றி பெற்றது.

சவுதி புரோ லீக் போட்டியில் அல்-அஹில் சவுதி அணியை எதிர்கொண்டது அல் நஸர். 

KSU கால்பந்து மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் 4வது நிமிடத்திலே ரொனால்டோ மிரட்டலாக கோல் அடித்தார். 

அதனைத் தொடர்ந்து 17வது நிமிடத்தில் அல்-நஸர் அணியின் தலிஸ்கா கோல் அடித்தார். 

அதற்கு பதிலடியாக அல்-அஹில் சவுதி வீரர் கேஸ்சி 30வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

பின்னர் தலிஸ்கா 45+6வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க, 50வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் அல் அஹிலின் ரியாத் மஹரேஸ் கோல் அடித்தார்.

இரு அணிகளும் சரி சமமாக மாறி மாறி கோல் அடித்ததால் ஆட்டத்தில் அனல் பறந்தது. 

கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் ஒரு கோல் (52வது) அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். 

இதன்மூலம் அல் நஸர் அணி 4-2 என முன்னேறியது.

87வது நிமிடத்தில் அல்-அஹில் அணிக்கு ஒரு கோல் (ஃபெரஸ் அல்ரிகான்) மட்டுமே கிடைக்க அந்த அணி 3-4 என தோல்வியடைந்தது. 

இந்தத் தொடரில் அல் நஸர் அணிக்கு 5வது வெற்றி ஆகும். 

அடுத்ததாக சாம்பியன்ஸ் கிங் கோப்பை போட்டியில் ஓஹொட் அணியை எதிர்கொள்கிறது அல் நஸர்.   

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்