Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் கோர சம்பவம்! 6 மாத குழந்தையை  கடித்துகுதறிய எலிகள்

அமெரிக்காவில் கோர சம்பவம்! 6 மாத குழந்தையை  கடித்துகுதறிய எலிகள்

23 புரட்டாசி 2023 சனி 10:42 | பார்வைகள் : 4237


அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் 6 மாத குழந்தையை எலிகள் கடித்துகுதறிய சம்பவத்தில் குழந்தையின் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 டேவிட் ஷோனபாம் மற்றும் ஏஞ்சல் ஷோனபாம் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு 2 குழந்தைகளுடன் பிறந்து 6 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. 

அவர்களின் மற்றொரு உறவுக்கார பெண்மணியும் அவர்களுடன் வசித்து வந்த நிலையில் 6 மாத ஆண் குழந்தையின் உடலெங்கும் காயங்கள் இருப்பதாக எவான்ஸ்வில் அவசரசேவைக்கு குழந்தையின் தந்தை தகவலளித்தார்.

இதனையடுத்து அவர்கள் வீட்டிற்கு காவல்துறையினர் விரைந்து வந்த பார்த்த போது அக்குழந்தை தலை மற்றும் முகத்தில் 50 இடங்களில் காயங்களுடன் உடல் முழுவதும் ரத்த களரியாக காணப்பட்டான்.

வலது கரத்தில் அனைத்து விரல்களின் தலைபாகங்களிலும் சதை முழுவதுமாக காணாமல் போயிருந்தது. 

ஒரு சில விரல்களில் உள்ளேயிருக்கும் எலும்பு வெளியே தெரியும் அளவிற்கு காயங்கள் இருந்த நிலையில் மருத்துவமனையில் சிகிற்சையளிக்கப்பட்டது.

குழந்தையின் காயங்களுக்கான காரணங்கள் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் அக்குழந்தையை ஒன்றுக்கும் மேற்பட்ட எலிகள் கடித்திருப்பது தெரிய வந்தது.

வீடு முழவதும் குப்பை கூளங்கள் நிறைந்து எலிகள் நடமாட்டம் இருப்பதும் தெரியவந்தது. 

இதனையடுத்து குழந்தையை வளர்ப்பதில் பொறுப்பற்ற முறையில் இருந்ததற்காகவும் பராமரிக்கும் கடமையில் தவறியதற்காகவும் அத்தம்பதியினரையும் அவர்களின் உறவுக்கார பெண்மணியையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மருத்துவமனை சிகிச்சை முடிந்து அந்த குழந்தை, குழந்தைகள் பராமரிப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டு தற்போது நலமாக உள்ளதுடன் விட்டில் இருந்த மற்ற குழந்தைகளும் காப்பகத்தில் ஒப்படைக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.   

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்