Paristamil Navigation Paristamil advert login

 ஜப்பானில் நண்டு உணவு சாப்பிட்ட  சுற்றுலா பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

 ஜப்பானில் நண்டு உணவு சாப்பிட்ட  சுற்றுலா பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

23 புரட்டாசி 2023 சனி 11:21 | பார்வைகள் : 3561


ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஜுன்கோ ஷின்பா தனது நண்பர்கள் மூன்று பேருடன் சிங்கப்பூரில் உள்ள ரெஸ்டாரன்டில் சாப்பிட சென்றிருந்தார்.

சப்ளை செய்யும் நபர், இங்கு நண்டு உணவு (Crab Dish) பிரமாதமாக இருக்கும் என கூறி அதன்விலை 20 டாலர் எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஜுன்கோ தனது நண்பர்களுடன் அந்த நண்டு உணவை சாப்பிட்டுள்ளார். 

அவர்கள் சாப்பிட்டு முடித்த பின்னர், சப்ளை செய்த நபர், பில்லை நீட்டியுள்ளார்.

அப்போது நண்டு உணவுக்கு 680 டாலர் பில் போட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இதுகுறித்து ரெஸ்டாரன்ட் நிர்வாகத்திடம் தெரிவிக்க, அவர்கள் 100 கிராம் நண்டு டிஷ் 20 டாலர்.

உங்களுக்கு 3,500 கிராம் நண்டு டிஷ் பரிமாறப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.

சப்ளை செய்த நபர் அவ்வாறு தெரிவிக்கவில்லையே, நாங்களும் மொத்தத்தையும் ஆர்டர் செய்யவில்லையே, என கூறிய ஜுன்கோ பொலிஸாரை அழைக்க கேட்டுக்கொண்டார்.

பொலிஸார் அங்கு வந்ததை அடுத்து ஜுன்கோ நடந்த சம்பவம் குறித்து விளக்கமாக எடுத்துக் கூறினார்.

அதற்கு தங்களது சப்ளையர் சரியான முறையில் அவர்களுக்கு எடுத்துரைத்தார் என ரெஸ்டாரன்ட் தரப்பில் விளக்கம் அளித்தனர்.

இறுதியாக ரெஸ்டாரன்ட் 78 டாலர் (6,479 ரூபாய்) தள்ளுபடி செய்ய ஒப்புக்கொண்ட நிலையில் அதன்பின் ஜுன்கோ மீதி பணத்தை செலுத்தியதாக கூறப்படுகின்றது.     

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்