Paristamil Navigation Paristamil advert login

Saint-Denis : தீயணைப்பு வீரர் ஒருவரது சாவுக்கு காரணமானவர் கைது

Saint-Denis : தீயணைப்பு வீரர் ஒருவரது சாவுக்கு காரணமானவர் கைது

23 புரட்டாசி 2023 சனி 18:03 | பார்வைகள் : 10268


கடந்த ஜூலை மாதம் தீயணைப்பு படை வீரர் ஒருவர் கடமையில் ஈடுபட்டிருந்தபோது கொல்லப்பட்டிருந்தார். தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அவர் சுவாசத்திணறலுக்கு உள்ளாகி மரணித்திருந்தார். இந்நிலையில், அச்சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Saint-Denis நகரில் உள்ள கட்டிடம் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மகிழுந்துகளை ஒருவர் எரியூட்டியுள்ளார். அதையடுத்து தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர்.La Courneuve நகர படைப்பிரிவினைச் சேர்ந்த 24 வயதுடைய வீரர் ஒருவர் இச்சம்பவத்தில் பலியாகியிருந்தார். 

மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சுவாசிக்க முடியாத நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர் சிகிச்சை பலனின்றி பலியாகியிருந்தார்.  அச்சம்பவத்தில் மொத்தமாக 23 மகிழுந்துகள் எரியூட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில், மேற்படி மகிழுந்து எரிந்தமைக்குரிய காரணமான ஒருவரை இரண்டு மாதங்களுக்குப் பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை Saint-Denis நகரில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீதான விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்