ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கித் துப்பாக்கி!! அச்சம்!!
23 புரட்டாசி 2023 சனி 18:31 | பார்வைகள் : 8434
நஹேலின் சாவின் பின்னர் பெரும் கலவரங்கள் நடந்து 3 மாதங்கள் ஆகிய நிலையில், இன்று பரிசில் காவற்துறையினரின் அத்துமீறல்களிற்கு எதிராக போராட்டம் நடாத்தப்பட்டது. nதில் காவற்துறையினரிற்கு எதிராக பெரும் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காவற்துறையினரின் வாகனங்கள் மீது கற்கள் எறியப்பட்டுளன. இதில் மூன்று காவற்துறையினர் காயமடைந்துள்ளனர் எனப் பரிசின் காவற்;துறைத் தலைமயகம் தெரிவித்துள்ளது.
காவற்துறையினர் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளை உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மனன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இதே நேரம், இந்த வன்முறையில், காவற்துறையினரின் வாகனத்துடன் ஆர்ப்பாட்டக்கார்களின் வாகனம் வந்து மோதியதையடுத்து, தற்காப்பிற்காக ஒரு காவற்துறை வீரன் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கித் துப்பாக்கியை நீட்டி உள்ளார்.
இதனை இப்பொழுதே ஊடகங்கள் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டன. இதன் எதிரொலி என்னவாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.