Paristamil Navigation Paristamil advert login

Ouigo தொடருந்தில் மூட்டைப்பூச்சி தொல்லை - பெண் ஒருவர் வெளியிட்ட காணொளியினால் பரபரப்பு

Ouigo தொடருந்தில் மூட்டைப்பூச்சி தொல்லை - பெண் ஒருவர் வெளியிட்ட காணொளியினால் பரபரப்பு

24 புரட்டாசி 2023 ஞாயிறு 05:23 | பார்வைகள் : 5238


Ouigo தொடருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர், மூட்டைப்பூச்சி (PUNAISES DE LIT) தொல்லைக்கு ஆளாகியிருக்கிறார். அவர் வெளியிட்ட காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகியிருக்கிறது. 

பரிசில் இருந்து Lille நகருக்கு பயணித்திருந்த பயணி ஒருவர் பலத்த மூட்டைப்பூச்சு கடிக்கு ஆளாகியுள்ளார். இதனால் கோபமடைந்த அவர், மூட்டைப்பூச்சியினை காணொளியாக படம் பிடித்து, X ( பழைய பெயர் Twitter) சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். ‘TGV கூட மூட்டைப்பூச்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறது. Ouigo உங்களது தொடருந்துகளை தூய்மைப்படுத்துவதை மறக்கவேண்டாம். நன்றி!’ எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த காணொளி இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு இதுவரை 3.5 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 

இச்சம்பவத்தை அடுத்து, SNCF அப்பெண்ணை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளது. ஆனால் அது தோல்வியில் முடிய, அவர்கள் அதே சமூகவலைத்தளமூடாக பதிலளித்துள்ளனர். ‘தூய்மைப்பு பணியாளர்களுக்கு நாம் இதனை அறிவித்துள்ளோம். அவசியமான நடவடிக்கை விரைவாக எடுக்கப்படும்!’ என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SNCF தரப்பில், ஒவ்வொரு 60 நாட்களுக்கும் ஒரு தடவை சுழற்சி முறையில் மூட்டைப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் விதமாக   தொடருந்துகள் சுத்திகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்