Paristamil Navigation Paristamil advert login

பார்வதியாக நடிக்கிறாரா நயன்தாரா?

பார்வதியாக நடிக்கிறாரா நயன்தாரா?

24 புரட்டாசி 2023 ஞாயிறு 10:42 | பார்வைகள் : 6068


 நயன்தாரா பிரபாஸ் உடன் இணைந்து தெலுங்கில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. அதன்படி விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகி வரும் கண்ணப்பர் திரைப்படத்தில் பிரபாஸ் சிவனாக நடிக்கிறார் என்றும் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா பார்வதி தேவியாக நடிக்க உள்ளார் என்றும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான யோகி எனும் திரைப்படத்தில் பிரபாஸுடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ளார். அதை தொடர்ந்து கடந்த 2011 இல் வெளியான ஸ்ரீ ராம ராஜ்ஜியம் திரைப்படத்தில் நந்த முரி பாலகிருஷ்ணா உடன் இணைந்து சீதா தேவியாக நடித்திருந்தார். இதில் நயன்தாரா தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்