RER B :புதிய தொடருந்துகள் மாற்றப்படுவதில் தாமதம்
27 புரட்டாசி 2123 திங்கள் 08:44 | பார்வைகள் : 3849
RER B சேவைக்காக புதிய தொடருந்துகள் உருவாக்கும் பணி தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
RER B சேவைகளுக்கான தொடருந்துகளை Alstom நிறுவனம் தயாரிக்கிறது. 2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த தொடருந்து தயாரிப்பு பணி நிறைவடைந்து, புதிய தொடருந்துகள் சேவைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்படி தாமதத்தினை குறித்த நிறுவனம் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 18 மாதங்கள் தாமதமாக, 2027 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலேயே அவை தயாரித்து முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நவீன வசதிகளை உள்ளடக்கிய MI20 ரக தொடருந்துகளையே RER B சேவைக்காக தயாரிக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.