கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு கருக்கலைப்பு - சென்ற ஆண்டில் பதிவு
27 புரட்டாசி 2023 புதன் 10:09 | பார்வைகள் : 7670
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அதிகூடிய அளவில் கருக்கலைப்பு (IVG) எண்ணிக்கை சென்ற ஆண்டில் பதிவாகியுள்ளது.
கருக்கலைப்பு ஆதரவாகவும், எதிராகவும் விவாதங்கள் முன்வைக்கப்பட்டும் நிலையில், சென்ற 2022 ஆம் ஆண்டில் பிரான்சில் 234,300 எண்ணிக்கையிலான கருக்கலைப்புக்கள் பதிவாகியுள்ளன. 1990 ஆம் ஆண்டின் பின்னர் இந்த அதிகூடிய எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
விதிவிலக்கான 2019 ஆம் ஆண்டு (கொவிட் 19 பரவல்) ஆண்டு அதிகளவான கருக்கலைப்புக்கள் பிரான்சில் பதிவாகியிருந்தது. அந்த எண்ணிக்கை சென்ற ஆண்டு முறியடிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டு 7,000 கருக்கலைப்புக்கள் அதிகமாகும். நாள் ஒன்றுக்கு 16 வீதம் இந்த கருக்கலைப்புக்கள் பதிவாகியள்ளது.
அதேவேளை, கருக்கலைப்பு செய்யும் பெண்களின் வயது எல்லை 15 இல் இருந்து ஆரம்பமாகுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 28 ஆம் திகதியை உல்க கருக்கலைப்பு உரிமை நாளாக கடைப்பிடிக்கப்படும் நிலையில், இது தொடர்பாக நாளை பிரான்சில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதை அடுத்தே மேற்படி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.