La Courneuve : வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு!
27 புரட்டாசி 2023 புதன் 14:59 | பார்வைகள் : 9199
தமிழ் மக்கள் செறிந்துவாழும் La Courneuve (Seine-Saint-Denis) நகரை ஊடறுக்கும் சாலைகளில் வேகக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.
A1 மற்றும் A86 நெடுஞ்சாலைகளில் இந்த புதிய வேகக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. மணிக்கு 90 கி. மீ வேகமாக உள்ள இந்த சாலைகளை மட்டுப்படுத்தி தற்போது மணிக்கு 70 கி. மீ வேமாக குறைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசடைவு பெருமளவில் அதிகரித்துள்ள நிலையில், இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த வேகக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.
இவ்விரு சாலைகளும் குறித்த நகரில் மொத்தமாக 9 கி. மீ தூரத்தினைக் கொண்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 400,000 வாகனங்கள் இந்நகரைக் கடக்கின்றன. இந்த வேகக்கட்டுப்பாட்டினால் சுற்றுச்சூழல் மாசடவை பெருமளவில் குறைக்க முடியும் என தாம் நம்புவதாக La Courneuve நகரசபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.