விவாகரத்து வழங்குவதில் தாமதம் - மனைவியை நீதிமன்றத்தில் வைத்து கத்தியால் குத்திய கணவர்

27 புரட்டாசி 2023 புதன் 17:24 | பார்வைகள் : 14233
நபர் ஒருவர் தனது மனைவியை நீதிமன்ற வாசலில் வைத்து கத்தியால் குத்தியுள்ளார். விவாகரத்துக்காக காத்திருக்கும் நபர் ஒருவரே இச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
மார்செய் (Marseille) நகரின் 3 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கில் ஈடுபட்டிருக்கும் 56” வயதுடைய ஒருவர், தனது மனைவியை (வயது 51) கத்தியால் பல தடவைகள் குத்தியுள்ளார். படுகாயமடைந்த மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருவருக்கிடையே விவாக்ரத்து கோரும் வழக்கு தாமதமாகிக்கொண்டே செல்வதால் ஆத்திரடைந்த கணவரே இத்தாக்குதலை நடத்தியதாகவும், சம்பவ இடத்தில் இருந்து அவர் தப்பி ஓடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.