Paristamil Navigation Paristamil advert login

பல கோடிக்கு விற்பனையாகும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கையெழுத்து

பல கோடிக்கு விற்பனையாகும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கையெழுத்து

28 புரட்டாசி 2023 வியாழன் 05:55 | பார்வைகள் : 3282


பிரபல விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கை, பொது சார்பியல் கொள்கை ஆகியவை உள்ளடக்கிய பிரதி ஒன்று விற்பனை செய்யபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருகின்றது.

‘ஐன்ஸ்டீன்’ என்ற பெயரானது நம் வாழ்நாளில் அதிகம் கேட்ட பெயராக நிச்சயம் இருக்கும். ஐன்ஸ்டீன் ஒரு சிறந்த மனிதர். அறிவியலைத்தாண்டி அரசியல், சமூகம், சேவை, தத்துவம் என பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கினார். 

மேலும் இவர் இயற்பியல் அறிஞர் ஆவார். இயற்பியல் துறை மீதான இவரது ஆளுமையானது இன்று வரை இயற்பியளாளருக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது.

ஒளியின் உற்பத்தி தொடர்பான கட்டுரை, சிறப்புச் சார்புக் கோட்பாடு, நிறை ஆற்றல் சமன்மை விதி என்று பல அறிவியல் ஆராய்சிகளை அடங்கிய விதியினை அடுத்தடுத்து வெளியிட்டார்.

பலபல புதிய கண்டுபிடிப்புகள், e=mc2, the theory of special relativity photoelectric போன்ற இயற்பியல் விதிகள் என வெளியிட்டார். இவர் 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதியன்று உயிரிழந்தார். 

பல வருடங்களுக்கு மேல் குடும்பத்தாரின் அனுமதியின்றி இவரின் மூளை ஆராய்ச்சி செய்யப்பட்டது.

இந்நிலையில் இவர் வெளியிட்ட சார்பியல் கொள்கை, பொது சார்பியல் கொள்கை ஆகியவை உள்ளடக்கிய பிரதி ஒன்று விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருகின்றது.  

ஐன்ஸ்டீனின் கையெழுத்து சார்பியல் கொள்கை மற்றும் பொது சார்பியல் கொள்கையை ஜெர்மன் மொழியில் விளக்கமளித்து எழுதிய கட்டுரைகள் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் 1929 ஆண்டு வெளியாகியது. 

தற்போது, அந்தப் பிரதியானது சீனாவின் ஷாங்காய் நகரத்தில் செப்.28 கிறிஸ்டி ஏல நிறுவனம் நடத்திய ஏல விற்பனையில் ரூ.10.7 கோடிக்கு விற்பனையாவுள்ளது.

மேலும் இந்த பிரதியானது 14 பக்கங்களையும் சார்பியல் கொள்கையின் பயன்பாடும் கொள்கைகளுடன் தொடர்புடைய இரு சமன்பாடுகள், காலம்-இடம் தொடர்பு குறித்து விளக்கும் ஒரு வரைபடம், அறிவியல் சூத்திரங்களும் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.     

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்