Paristamil Navigation Paristamil advert login

இலங்கை கிரிக்கட் வீரரின் பாலியல் வழக்கு - சிட்னி நீதிமன்றத்தின் தீர்ப்பு

இலங்கை கிரிக்கட் வீரரின் பாலியல் வழக்கு - சிட்னி நீதிமன்றத்தின் தீர்ப்பு

28 புரட்டாசி 2023 வியாழன் 06:00 | பார்வைகள் : 2395


அவுஸ்திரேலியாவில் பலாத்கார வழக்கில் சிக்கியிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் குற்றவாளி அல்ல என சிட்னி நீதிமன்றத்தால் கண்டறியப்பட்டுள்ளார்.

சர்ச்சையில் சிக்கியிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் சிட்னி நீதிமன்றம் விடுவித்துள்ளது.

32 வயதான தனுஷ்க குணதிலக, நவம்பர் மாதம் டிண்டர் செயலி ஊடாக அறிமுகமான சிட்னியை சேர்ந்த பெண் ஒருவரை அவரது குடியிருப்பில் வைத்து பாலியல் ரீதியாக தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

குணதிலக மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. 

ஆனால் ஒப்புதலின்றி பாதுகாப்பு உறையை அகற்றிய குற்றச்சாட்டில் மட்டும் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. நான்கு நாட்கள் முன்னெடுக்கப்பட்ட இந்த விசாரணையில்,

சம்பவத்தன்று குணதிலகவால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என ஒரு நொடியில் பயந்ததாகவும், கழுத்தை நெரித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். 

ஆனால் தம் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் குணதிலக மறுத்திருந்தார்.

மேலும், ஒவ்வொரு முறையும் பாதிக்கப்பட்டதாக கூறும் பெண் தமது வாக்குமூலத்தை மாற்றி வருவதாகவும் அவர் வாதிட்டுள்ளார். 

சிடினி நீதிமன்றம், குணதிலக நடந்தவற்றை ஒளிவு மறைவின்றி கூறியுள்ளதாகவும், இதில் நம்பாமல் இருக்க முகாந்திரம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

மட்டுமின்றி, இந்த குற்றச்சாட்டுகளில் எதுவும் உண்மை இல்லை எனவும் கூறி, குணதிலகவை சிட்னி நீதிமன்றம் விடுவித்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்