உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023! 7 வருடங்களுக்கு பின் இந்தியாவில் பாகிஸ்தான் அணி
28 புரட்டாசி 2023 வியாழன் 06:20 | பார்வைகள் : 2812
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து இறங்கியுள்ளது.
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 ஆம் திகதி தொடங்கி நவம்பர் 19 ஆம் திகதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெற உள்ளது.
இதில் இந்தியா, அவுஸ்திரேலியா, நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பலப்பரீட்சை செய்யவுள்ளது.
பாபர் அசாம் தலைமையில் அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் அணியில் ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், ஷதாப் கான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, சல்மான் அலி ஆகா, முகமது நவாஸ், உசாமா மிர், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், ஹாரிஸ் ரவுஃப், ஹசன் அலி, ஷாஹின் ஷா அஃப்ரிடி, முகமது வாசிம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக 7 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது.
இதற்காக பாகிஸ்தானில் இருந்து துபாய் புறப்பட்ட பாகிஸ்தான் அணி துபாயில் இருந்து புறப்பட்டு இந்தியாவின் ஹைதராபாத் விமான நிலையத்தில் வந்து இறங்கியுள்ளனர்.
2016ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்கு பிறகு இந்தியாவிற்கு வரும் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு பிசிசிஐ சார்பில் வழங்கப்பட்டது.
பாகிஸ்தான் அணி அக்டோபர் 6ம் திகதி தங்களுடைய முதல் உலகக் கோப்பை ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.