Paristamil Navigation Paristamil advert login

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

28 புரட்டாசி 2023 வியாழன் 07:54 | பார்வைகள் : 3853


தொடர்ச்சியாக நிலவிவரும் மழையுடனான வானிலையினால் நில்வள, குடா, ஜின் கங்கைகளில் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையால், குறித்த கங்கைகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள்  அவதானமாக செயற்படுமாறு தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நில்வள கங்கைக்கு அருகிலுள்ள  கொட்டபொல, பிட்டபெத்தர, அக்குரஸ்ஸ, பஸ்கொட, அத்துரலிய, மாலிம்பட, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர பிரதேச செயலகப் பிரிவுகள் தாழ்வான பகுதிகளில் கணிசமான அளவு வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

அத்துடன், குடா கங்கைக்கு அருகிலுள்ள பாலிந்தநுவர மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலக பிரிவுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஜின் கங்கைக்கு அருகிலுள்ள வெலிவிட்டிய திவித்துர, பத்தேகம, நியகம நெலுவ, தவலம, நாகொட,  எல்பிட்டிய பொப்பே பொட்டல பிரதேச செயலக பிரிவுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் வாழும் மக்களும், அவ்வழியாகச் செல்லும் வாகன சாரதிகளும் அவதானமாக செயற்பட வேண்டுமென தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்