Paristamil Navigation Paristamil advert login

வேர்க்கடலை குழம்பு

வேர்க்கடலை குழம்பு

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 12733


 வேர்க்கடலையை வேக வைத்து சுண்டல் செய்து சாப்பிட்டிருபோம் அல்லது அதனை வறுத்து சாப்பிட்டிருப்போம். ஆனால் அதனை குழம்பு செய்து சாப்பிட்டதுண்டா? இங்கு அந்த வேர்க்கடலையைக் கொண்டு செய்யப்படும் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஈஸியானது மட்டுமின்றி, சப்பாத்தி, சாதம் போன்றவற்றிற்கு ஏற்றவாறும் இருக்கும். சரி, இப்போது அந்த வேர்க்கடலை குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 

 
தேவையான பொருட்கள்: 
 
பச்சை வேர்க்கடலை - 1 கப் 
வெங்காய பேஸ்ட் - 3 டீஸ்பூன் 
தக்காளி பேஸ்ட் - 2 டீஸ்பூன் 
மல்லி தூள் - 1 டீஸ்பூன் 
பாவ் பாஜி மசாலா - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - 2 டீஸ்பூன் 
சீரகம் - 1/4 டீஸ்பூன் 
கொத்தமல்லி - சிறிது (அலங்கரிக்க) 
 
செய்முறை: 
 
முதலில் வேர்க்கடலையை இரவில் படுக்கும் போதோ அல்லது குறைந்தது 4 மணிநேரமோ நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு நீரில் கழுவி, பின் குக்கரில் போட்டு, உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். 
 
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, பின் வெங்காய பேஸ்ட் மற்றும் தக்காளி பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். பிறகு அதில் மல்லி தூள், மஞ்சள் தூள், பாவ் பாஜி மசாலா சேர்த்து 1 நிமிடம் கிளறி, வேக வைத்துள்ள வேர்க்கடலையை சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், வேர்க்கடலை குழம்பு ரெடி!!!
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்