Paristamil Navigation Paristamil advert login

கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் உணவு பொருட்கள் அடங்கிய 115 கொள்கலன்கள்

கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் உணவு பொருட்கள் அடங்கிய 115  கொள்கலன்கள்

28 புரட்டாசி 2023 வியாழன் 14:27 | பார்வைகள் : 2809


கொழும்பு துறைமுகத்தில் 115 கொள்கலன்களில் உள்ள உணவு பொருட்கள் தேங்கிக்கிடப்பதாக தெரியவந்துள்ளது.

குறித்த உணவுகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

பல நிறுவனங்களிடமிருந்து அனுமதிகள் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, 74 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான உணவுப் பொருட்களை உள்ளடக்கிய 115 கொள்கலன்களை விடுவிக்க இரண்டு வருடகால அவகாசம் சென்றுள்ளது.

இதனால் பொருட்களை அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

விவசாயத் திணைக்களம், சுகாதாரம் மற்றும் கால்நடை உற்பத்தித் திணைக்களத்தினால் பொருட்களை வெளியிடுவதற்கு வழங்கப்பட வேண்டிய அறிக்கைகள் தாமதமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கமைய, உணவுப் பொருட்கள் அடங்கிய 27 கொள்கலன்களை வெளியிட 563 நாட்களும், மற்ற 27 உணவுப் பொருள்களைக் கொண்ட கொள்கலன்களை வெளியிட சுமார் இரண்டு வருடங்களும் சென்றுள்ளன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்