Paristamil Navigation Paristamil advert login

இலங்கையர்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை

இலங்கையர்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை

29 புரட்டாசி 2023 வெள்ளி 03:09 | பார்வைகள் : 5854


இலங்கையில் நீண்ட வார இறுதியில் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள், தமது பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளது. 

 கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ, இந்த விடயத்தை குறிப்பிட்டார்.  அத்துடன், வாகனங்களை செலுத்தும் போது உரிய போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறும் அவர் கோரியுள்ளார். 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவுகின்றது. 
 
எனவே, வாகனங்களை அதிக வேகத்தில் செலுத்துவது, போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது, மது போதையில் வாகனத்தை செலுத்துவது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 
 
பொதுமக்களின் நன்மை கருதி, நாடளாவிய ரீதியில் அதிகளவான போக்குவரத்து பிரிவிலுள்ள பொலிஸார் கடமையில், ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்