Paristamil Navigation Paristamil advert login

சுவிஸ் நாட்டில் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு புதிய சட்டம்

சுவிஸ் நாட்டில் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு புதிய சட்டம்

26 புரட்டாசி 2023 செவ்வாய் 09:34 | பார்வைகள் : 4025


சுவிஸ் நாடாளுமன்றம், வீட்டு உரிமையாளர்களுக்கு ஆதரவாக வாடகை வீடுகளில் வசிப்போருக்கு எதிராக சட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இம்மாதம் செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி, சுவிஸ் நாடாளுமன்றத்தில் மேலவை உறுப்பினர்கள், வீட்டு உரிமையாளர்களுக்கு ஆதரவாக சட்ட மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார்கள்.

அந்த சட்ட மாற்றங்களுக்கு ஆதரவாக 25 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளார்கள்.

Swiss tenancy laws என்னும் சுவிஸ் வாடகை வீடுகள் தொடர்பிலான சட்டங்களில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

1.வாடகை வீடுகளில் குடியிருப்போர், அந்த வீடுகளையோ அல்லது அந்த வீடுகளிலுள்ள அறைகளையோ வேறு யாருக்காவது வாடகைக்கு விடுவதாக இருந்தால், அவர்கள் முன்கூட்டியே வீட்டு உரிமையாளரிடம் எழுத்துப்பூர்வ அனுமதி பெறவேண்டும். 

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அவர்கள் யாரையும் வாடகைக்கு வைக்கக் கூடாது.

2.வீட்டு உரிமையாளர்கள், தாங்கள் வாடகைக்கு விட்டுள்ள வீட்டுக்கு, தாங்களே குடிவர முடிவு செய்தால், தங்களுக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருப்போரை, இனி எளிதாக வீட்டைக் காலி செய்ய வைக்க முடியும்.

வீட்டில் வாடகைக்கு இருப்போரை வீட்டைக் காலி செய்ய வைக்கவேண்டுமானால், வீட்டு உரிமையாளர் 3 முதல் 4 ஆண்டுகள் வரை காத்திருக்கவேண்டும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்