ரஷ்ய நோயாளர்கள் நிலமை குறித்து பிரான்ஸ் மருத்துவ துறையினர் கவலை.
26 புரட்டாசி 2023 செவ்வாய் 11:25 | பார்வைகள் : 5124
ரஷ்யாவில் எயிட்ஸ் நோய்க்கான சிகிச்சை மிகவும் மந்தமான நிலையில் உள்ளது. குறித்த தொற்றுநோய் விரைவாக பரவும் நாடுகளி்ல் ரஷ்யா ஐந்தாவதாக உள்ளது, அந்த நாட்டின் மக்கள் தொகையில் 1.5% வீதமான மக்கள் HIV கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கே சிகிச்சை பெறும் வசதி கிடைக்கிறது. இது ஒரு மோசமான நிலை என பிரான்ஸ் மருத்துவத்துறை கவலை வெளியிட்டுள்ளது.
HIV கிருமிக்கு எதிராக போராடும் antirétroviraux மாத்திரைகள் ரஷ்யாவின் பல பகுதிகளி்ல் இல்லை என்னும் நிலையே காணப்படுகின்றது. இந்த நிலைமை குறி்த்து கருத்துத் தெரிவித்த, ரஷ்யாவில் வாழும் சமூக சிந்தனையாளரும், செயல்பாட்டாளரும், HIV நோய்த்தொற்றால் பதிக்கப்பட்டவருமான Svetlana "ஒரு நோயாளியாக, நான் தொடர்ந்து கவலைப்படுகிறேன், நான் எப்போதும் என்னையே கேட்டுக்கொள்கிறேன்: 'நாளை எனக்கு மருந்து கிடைக்குமா?' எனக்கு இலவச சிகிச்சை கிடைக்குமா? பலர் இந்த மருந்துகளை கனவில் மட்டுமே பார்க்கிறார்கள்..." எனத் தெரிவிக்கிறார்.
இந்த நிலைக்மைக்கு காரணம் "ரஷ்யாவின் அசமந்த போக்கு, அடுத்து ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தடை, மருந்து வகைகளைத் தயாரிக்கும் வெளிநாட்டு மருந்துவ ஆய்வங்கள் அங்கிருந்து வெளியேறியமை, என பல காரணங்களைக் கூறுகிறார் பிரான்ஸ் மருத்துவத் துறையின் எயிட்ஸ் நோய்க்கான சிகிச்சைப் பிரிவின் தலைவர்.
ரஷ்யாவில் உள்ள Médecins du Monde ஒருங்கிணைப்பாளர் Olga Maximov குறிப்பிடும் போது "எயிட்ஸ் நோய்பற்றிய விழிப்புணர்வு பொதுக் கொள்கைகள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலலயில் உள்ளது, ஒரு சில ரஷ்ய சங்கங்கள் மட்டுமே அவற்றை இங்கு மேற்கோள்கிறது" என தெரிவிக்கிறார்.
இந்த விடயத்தை ரஷ்ய அரசு அடியோடு நிராகரிக்கிறது. "தங்களின் அரசு மீதும், தங்களின் மருத்துவத் துறையின் மீதும் நாட்டுமக்களுக்கு அதிதிருப்தியை ஏற்படுத்த மேலைத்தேய நாடுகள் நடத்தும் கருத்தியல் போர்" இதுவென ரஷ்யா தெரிவித்துள்ளது.