ஜேசன் சஞ்சய் முதல் படத்தின் இசையமைப்பாளர் இந்த பிரபலமா?
26 புரட்டாசி 2023 செவ்வாய் 15:02 | பார்வைகள் : 9885
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படத்தின் நாயகனாக கவின் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் கசிந்து உள்ளது.
ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கவின் நடிப்பில் உருவாகி வரும் ’ஸ்டார்’ திரைப்படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்க உள்ள நிலையில் கவின் ஜேசன் சஞ்சய் படத்திற்கும் அவர் இசையமைப்பாளர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் நடிக்கும் நாயகி உட்பட நட்சத்திரங்கள் தேர்வு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தயாரிப்பு தரப்பில் இருந்து விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan