மனைவியைக் கொலை செய்துவிட்டு கால்வதுறையினரை அழைத்த நபர்
26 புரட்டாசி 2023 செவ்வாய் 17:15 | பார்வைகள் : 13103
நபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு, காவல்துறையினரை அழைத்துள்ளார். 51 வயதுடைய பெண் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
Toulouse நகரில் இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. உள்ளூர் காவல்நிலையம் ஒன்றுக்கு இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பில், நபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டதாகவும், விரைந்து வருமாறும் தெரிவித்துள்ளார். அதையடுத்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர்.
அங்குள்ள வீடொன்றில், இரத்த வெள்ளத்தில் 51 வயதுடைய பெண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். தலையில் தாக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டதாகவும், தாக்குதல் நடத்திய அவரது 54 வயதுடைய கணவர் சடலத்துக்கு அருகே அமர்ந்திருந்ததாகவும், அவர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.


























Bons Plans
Annuaire
Scan