விமான படை முகாமில் குண்டு வெடிப்பு

26 புரட்டாசி 2023 செவ்வாய் 18:28 | பார்வைகள் : 10264
புத்தளத்தில் விமான பயிற்சி நிலையத்தில் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கற்பிட்டி கண்டல்குளி பகுதியில் உள்ள விமானப்படைத் தளத்தில் இன்று ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் விமானப்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கை விமானப்படை முகாமுக்கு சொந்தமான துப்பாக்கிச்சூடு பயிற்சி தளத்தில் துப்பாக்கி பயிற்சியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது குறித்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் இன்னொரு விமானப்படை சிப்பாய் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025