இலங்கையில் நிபா பாதித்த பன்றிகளை கண்டுபிடிக்க சோதனை!

27 புரட்டாசி 2023 புதன் 02:18 | பார்வைகள் : 7640
இலங்கையில் பன்றி பண்ணையில் வளர்க்கப்படும் பன்றிகளுக்கு நிபா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை பரிசோதிக்கும் பணி இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹிமாலி கொத்தலாவல இதனை தெரிவித்துள்ளார்.
இதனால் இன்று முதல் பண்ணைகளில் உள்ள பன்றிகளின் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு அவற்றை பரிசோதிக்கும் பணியை தொடங்க உள்ளது.
இதற்காக கால்நடைத்துறை அதிகாரிகளின் ஆதரவை பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பன்றிப் பண்ணைகள் பெரும்பாலும் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் அமைந்துள்ளதால், அந்தப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், பன்றிக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், அது பரவாமல் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1