Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் 2024 : 16,000 வேலை வாய்ப்புக்கள்!

ஒலிம்பிக் 2024 : 16,000 வேலை வாய்ப்புக்கள்!

27 புரட்டாசி 2023 புதன் 07:00 | பார்வைகள் : 11104


அடுத்த வருடம் பரிசில் இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போது, 16,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒலிம்பிக் போட்டிகளுக்கான திட்டமிடல்கள் துரித கதியில் இடம்பெற்று வரும் நிலையில், தற்காலிக பணியாளர்களின் சேர்க்கையும் இடம்பெற்று வருகிறது. வரவேற்பு, உணவு தயாரிப்பார்கள் - பரிமாறுபவர், தங்குமிடங்களில் பணியாற்றும் உதவியாளர்கள், மைதான தூய்மைப் பணியாளர்கள், உதவியாளர்கள், சாரதிகள், பாதுகாப்பாளர் என பல்வேறு துறைகளில் இந்த பணியாளர்கள் கோரப்பட்டுள்ளனர். 

இதுவரை இந்த பணிகளுக்காக 10,000 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், மேலும் 6,000 பேருக்கான வெற்றிடம் இருப்பதாக ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்