இலங்கையில் இளைஞர்களிடையே ஆபத்தான பழக்கம் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை

27 புரட்டாசி 2023 புதன் 04:44 | பார்வைகள் : 7291
இலங்கையில் இளைஞர்களிடையே “இ - சிகரெட்டுகள்” போன்ற அதிக அடிமையாக்கும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளின் பெருக்கம் சமீப காலமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
இதில் உள்ள நிகோடின் என்ற போதைப்பொருள் சக்தி வாய்ந்த போதைப்பொருளாகும் என தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
புகையிலை தொடர்பான பொருட்களால் ஏற்படும் தீங்கான நிலைமைகள் இந்த பொருட்களை பயன்படுத்துவதன் மூலமும் ஏற்படலாம் என குறித்த சபை சுட்டிக்காட்டுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும், பல்வேறு சுவைகள் மற்றும் நறுமணங்களைக் கொண்ட தயாரிப்புகளை இப்போது சந்தையில் வாங்க முடியும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எவ்வாறாயினும், இலங்கையில் இளைஞர்கள் மத்தியில் இவ்வகையான இலத்திரனியல் சிகரெட் பயன்படுத்தப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அதிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பது பெற்றோரின் பொறுப்பு எனவும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.