ஈராக்கில் ஏற்பட்ட தீ விபத்து! 100 பேர் பலி...

27 புரட்டாசி 2023 புதன் 05:18 | பார்வைகள் : 10366
ஈராக்கில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் குறைந்தது 100 பேர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சுமார் 150 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஈராக்கின் வடக்கில் உள்ள நினவா மாநிலத்தின் அல்-ஹம்டனியா பகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத விபத்தில் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளை வழங்க எல்லா வகையிலும் முயற்சி எடுக்கும்படி ஈராக்கியப் பிரதமர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் சம்பவ இடத்தில் வான வேடிக்கையால் தீ ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3