Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் - ரஷ்ய போர் பதற்றம்.... 14 முறை தாக்குதல்கள்..

உக்ரைன் - ரஷ்ய போர் பதற்றம்.... 14 முறை தாக்குதல்கள்..

27 புரட்டாசி 2023 புதன் 06:27 | பார்வைகள் : 13598


ரஷ்ய உக்ரைன் நாடுகளுக்கிடையிலான போர் பல மாதங்களை கடந்து செல்கின்றது.

ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைனிய பகுதி மீது கிட்டத்தட்ட 14 முறை உக்ரைன் தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கத்திய நாடுகளுடன் உக்ரைனின் நெருக்கத்தை கண்டித்து கடந்த ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி ரஷ்யா உக்ரைன் மீது போர் தாக்குதலை தொடங்கியது.

இந்த போர் நடவடிக்கையின் தொடக்க கால கட்டங்களில் போர் தீவிரமாக நடைபெற்று வருகினறது.

ரஷ்ய ஆதரவாளர்கள் அதிகம் வசிக்கும் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள டொனெட்ஸ்க் பிராந்தியத்தை சுயமாக அறிவிக்கப்பட்ட டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு (DPR) என ரஷ்யா அறிவித்தது.

இதற்கு உக்ரைன் மற்றும் பல்வேறு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமைமட்டும் சுயமாக அறிவிக்கப்பட்ட டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் மீது உக்ரைன் 14 முறை தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனை DPR பணிக்களுக்கான கூட்டு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு மையம் அறிவித்துள்ளது. 

இந்த தாக்குதலுக்கு உக்ரைன் 155 மிமீ மற்றும் 152 மிமீ காலிபர் பீரங்கி துப்பாக்கிகள் பயன்படுத்தியுள்ளனர்.

அத்துடன் பலமுறை ஏவுதல் ராக்கெட் அமைப்பும், 35 யூனிட் வரையிலான வெடி மருந்துகளையும் உக்ரைன் பயன்படுத்தியுள்ளது. 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்