புதிய வரலாறு படைத்த நேபாளம் அணி...
27 புரட்டாசி 2023 புதன் 08:09 | பார்வைகள் : 3189
ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடந்த மங்கோலியாவுக்கு எதிரான ஆட்டத்தில், நேபாளம் அணி 273 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை புரிந்துள்ளது.
முதலில் ஆடிய நேபாளம் அணியில் தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, அடுத்து களமிறங்கிய குஷால் மல்லா விஸ்வரூப ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.
ருத்ர தாண்டவம் ஆடிய குஷால் 34 பந்துகளில் சதமடித்து டேவிட் மில்லரின் சாதனையைதவிடுபொடியாக்கினார்.
அவருக்கு பக்கபலமாக ஆடிய கேப்டன் ரோஹித் பௌடெல் 27 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
அடுத்து வந்த திபேந்திர சிங் சரவெடியாய் சிக்ஸர்களை பறக்கவிட்டு, 9 பந்துகளில் அரைசதம் விளாசி, யுவராஜ் சிங்கின் அதிவேக அரைசதம் (12 பந்துகள்) சாதனையை முறியடித்தார்.
இவர்களின் மிரட்டலான ஆட்டத்தின் மூலம் நேபாளம் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 314 ஓட்டங்கள் குவித்தது.
குஷால் மல்லா 137 (50) ஓட்டங்களும், திபேந்திர சிங் 52 (10) ஓட்டங்களும் குவித்தனர்.
பின்னர் ஆடிய மங்கோலியா அணி 41 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதனால் நேபாளம் அணி 273 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது.
நேபாளம் படைத்த சாதனைகள்:
டி20யில் 300 ஓட்டங்கள் குவித்த முதல் அணி
அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி
அதிக சிக்ஸர்கள் விளாசிய அணி (26)
அதிவேக அரைசதம் அடித்த வீரர் - திபேந்திர சிங் (9 பந்துகள்)
அதிவேக சதம் விளாசிய வீரர் - குஷால் மல்லா (34 பந்துகள்)