Paristamil Navigation Paristamil advert login

ஆசிய விளையாட்டு போட்டி... தங்கம் வென்ற இந்தியா...!

ஆசிய விளையாட்டு போட்டி... தங்கம் வென்ற இந்தியா...!

27 புரட்டாசி 2023 புதன் 08:24 | பார்வைகள் : 6303


19 வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளதாக தகவல் வெளியாகி இருகின்றது.

ஒலிம்பிக்கு அடுத்து மிகப்பெரிய விளையாட்டு என்றால் அது ஆசிய விளையாட்டு போட்டி என்று கூறலாம். 

இந்த போட்டியானது 1951 ஆம் ஆண்டு டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்த பொட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகின்றது. 

இறுதியாக 2018 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்றது.

இந்த ஆண்டுக்கான போட்டியாது சீனாவில் ஹாங்சோல் நகரில் வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டு இருகின்றது.

ஆசிய கண்டத்தை சேர்ந்த சீனா, ஜப்பான், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, ஈரான், கஜகஸ்தான், வடகொரியா, தென் கொரியா, இலங்கை, கத்தார், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 45 நாடுகளை சேர்ந்த சுமார் 12,500 வீரர், வீராங்கனைகள் ஆசிய போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.

இதில் 655 பேர் இந்திய அணியின் வீரர் மற்றும் வீராங்கனைகள் ஆவர். 

இந்நிலையில் 5வது நாளாக நடைபெறும் போட்டியில் இந்திய அணி ஒரு தங்கப்பதக்கமும் ஒரு வெள்ளி பதக்கமும் வென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

துப்பாக்கி சுடுதலில் இந்திய மகளிர் அணியில் உள்ளவர்கள் தங்க பதக்கத்தை தன் வசம் எடுத்துள்ளார்கள்.  

மகளிருக்கான 25M துப்பாகி சுடுதல் போட்டியில் மனு பேக்கர், ஈஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகிய மூவர் அணியானது 1759 புள்ளிகளை பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்