பேருந்து கவிழ்ந்து விபத்து... இருவர் பலி

30 புரட்டாசி 2023 சனி 08:17 | பார்வைகள் : 12902
பிரித்தானியாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 வயது சிறுமி ஜெசிகா பேக்கர் மற்றும் பேருந்து சாரதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவில் மெர்சிசைடு பகுதியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஜெசிகா பேக்கர் என்ற 15 வயது சிறுமி மற்றும் பள்ளி பேருந்து சாரதி உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.
கால்டே கிரேஞ்ச் அனைத்து ஆண்கள் இலக்கணப் பள்ளி மற்றும் மேற்கு கிர்பி அனைத்து பெண்கள் இலக்கணப் பள்ளி தங்களது பேருந்து ஒன்று விபத்தில் சிக்கி இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விபத்தானது வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு பிறகு நடந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்தின் போது பேருந்தில் மொத்தம் 54 பேர் பயணித்தாக கூறப்படும் நிலையில் விபத்து ஏற்பட்ட M53 இல் பலருக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காயமடைந்த இரண்டு சிறுவர்கள் மட்டும் Alder Hey சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் சிறிய காயங்களுடன் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், உயிரிழந்த குடும்பத்தினருக்கு பொலிஸார் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் விசாரணை நடைபெற்று முடியும் வரை ஜங்ஷன் 4கிற்கும், 5கிற்கும் இடையிலான சாலை அடைக்கப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1