நீர்மூழ்கி போர்க்கப்பல்! தைவானின் தயாரிப்பு
30 புரட்டாசி 2023 சனி 08:59 | பார்வைகள் : 4683
சீனாவின் ஒரு பகுதியாக இருந்த தாய்வான் 1949 ஆம் ஆண்டு முதல் தனி நாடாகப் பிரிந்து வந்தது.
சமீப காலமாக தன்னுடன் இணைத்துக்கொள்ள சீனா முயற்சித்து வருகின்றது.
இதற்காக தாய்வான் எல்லையில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி சீனா போர்த் தொடுக்க ஆரம்பமாகி வருகின்றது.
அதேப்போல் இதனை அறிந்து சீனாவை அதற்கிணையாக எதிர்த்து போரிடுவதற்கு தாய்வானும் தயாரான நிலையில் உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாய்வானில் முதன்முறையாக “நகர்வால்” என்ற நீர்மூழ்கி போர்க்கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்போர்க்கப்பலின் அறிமுக விழா காஹ்சியுங் நகரில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வின் போது தாய்வான் நாட்டு அதிபர் சாய் இங் வென் கலந்துக் கொண்டு பேசுகையில் தாய்வான் வரலாற்றில் இது முக்கியமான நாள் ஆகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நீர்மூழ்கிக்கப்பலானது 229.6 அடி நீளமும் , 26.2 அடி அகலமும் 59 அடி உயரமும் கொண்டமைக்கப்பட்டுள்ளது.
இதில் 3000 டன் எடை வரையிலான பொருட்களை சுமந்து செல்ல முடியும்.
சில சோதனைகளை மேற்கொண்ட பின் இக்கப்பல் அடுத்த ஆண்டில் நாட்டின் கடற்படையில் சேர்க்கப்படும் என தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.