Paristamil Navigation Paristamil advert login

விராட் கோலியின் ஓய்வு பற்றி ஏபி டி வில்லியர்ஸ் கருத்து

விராட் கோலியின் ஓய்வு பற்றி ஏபி டி வில்லியர்ஸ் கருத்து

30 புரட்டாசி 2023 சனி 09:12 | பார்வைகள் : 4704


ஒருநாள் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றால், விராட் கோலி ஓய்வு முடிவை எடுக்க வேண்டும் என ஏபி டிவில்லியர்ஸ் கூறியுள்ளார். 

இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வரும் இந்திய அணி கோப்பையை வெல்லும் வாய்ப்புகள் அதிகம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இந்த நிலையில் யூடியூப்பில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் டிவில்லியர்ஸ், உலகக்கோப்பை குறித்தும் விராட் கோலி குறித்து கருத்து தெரிவித்தார்.

அவர் கூறுகையில், 'கோலி தென் ஆப்பிரிக்காவுக்கு (2027 உலகக்கோப்பை) பயணம் செய்வதை விரும்புகிறார் என்பது எனக்கு தெரியும். ஆனால், அதைச் சொல்வது மிகவும் கடினம். இது நீண்ட நேரம் ஆகும். முதலில் இந்த உலகக்கோப்பையில் கவனம் செலுத்துவோம், அதைத் தான் விராட் கோலி உங்களுக்கு சொல்வார் என்று நினைக்கிறேன்.

இந்த உலகக்கோப்பையை அவர்கள் (இந்தியா) வென்றால் மிக்க நன்றி என்று சொல்வது மோசமான நேரமாக இருக்காது என்று நினைக்கிறேன். அவர் தனது ஓய்வை அறிவிப்பதற்கான சரியான தருணமாக இது அமையும்.


இனி டெஸ்ட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் மட்டுமே நான் விளையாடுவேன் என அறிவித்துவிட்டு, அனைவருக்கும் நன்றி கூறி குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கலாம்' என தெரிவித்துள்ளார்.      

வர்த்தக‌ விளம்பரங்கள்