தொடரும் 49.3 - பிரதமரின் வரம்புமீறும் அதிகாரம்!
30 புரட்டாசி 2023 சனி 10:01 | பார்வைகள் : 6018
பாராளுமன்றத்தில் பெரும் குழப்பமும் எதிரொலிகளும் ஏற்பட்டுள்ளன.
பிரான்சின் வரவுசெலவுத் திட்டத்தினை பாராளுமன்ற வாக்கெடுப்பிற்கு விடாமல், தன்னிச்சை நிறைவேற்று அதிகாரமான 49.3 சட்டத்தினை மீண்டும் பிரயோகித்து பிரதமர் எலிசபெத் போர்ன் நிறைவேற்றியுள்ளார்.
இந்த 49.3 பிரயோகத்தின் படி எமானுவல் மக்ரோனின் ஆட்சிக்காலம் முழுவதும் அவரது வரவுசெலவுத் திட்டம் வாக்கெடுப்பின்றியே நிறைவேற்றப்படும்
இதனை எதிர்த்து, இடதுசாரிகள் இணைந்த அமைப்பான நுப்ஸ் வழங்கிய ஆட்சேபணை மனுவையும் பிரதமர் விளக்கமெதுவுமின்றி நிராகரித்துள்ளார்.
எமானுவல் மக்ரோனின் ஏவல்களை இவர் நிறைவேற்றுகிறார் எனவும், இது கடுமையான சர்வாதிகாரம் எனவும் பாராளுமன்றத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
எலிசபெத் போர்ன் பிரதமரானதிலிருந்து, 18 முறை இந்தத் தன்னிச்சை நிறைவேற்று அதிகாரமான 49.3 இனைப் பிரயோகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது