Paristamil Navigation Paristamil advert login

கிளிநொச்சியில் குழந்தைக்கு நேர்ந்த சோகம்

கிளிநொச்சியில் குழந்தைக்கு நேர்ந்த சோகம்

30 புரட்டாசி 2023 சனி 10:58 | பார்வைகள் : 6452


கிளிநொச்சி – செல்வாநகர் பகுதியில் நீர்த்தாங்கியில் வீழ்ந்து குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு வயதுடைய குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்ததாக கிளிநொச்சி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த குழந்தை மற்றுமொரு குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் நீர்த்தாங்கியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குழந்தையின் சடலம் மீதான பிரேத பரிசோதனை கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்றைய தினம் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்