Paristamil Navigation Paristamil advert login

இலங்கையின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இலங்கையின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

30 புரட்டாசி 2023 சனி 14:14 | பார்வைகள் : 6425


இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களுகங்கையை அண்மித்த சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கலவெள்ளாவ பகுதியில் களுகங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் அதனை அண்டிய பகுதிகளில், வெள்ளப்பெருக்கு எற்படக்கூடும் என நீர்பாசனத்திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், களுகங்கையின் நீர்மட்டம் புடுபாவுல பகுதியிலும் நில்வளகங்கையின் நீர்மட்டம் தல்கஹாகொட பகுதியிலும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களிலும் தொடரும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்