லீனா - ஜோந்தார்மினர் கண்டெடுத்த என்புகள்!
30 புரட்டாசி 2023 சனி 15:59 | பார்வைகள் : 8191
15 வயதுடைய லீனா காணாமற்போய் 7 நாட்கள் கடந்துள்ள நிலையில், அவர் காணாமற்போன பகுதிகள் மிகத் துல்லியமாக, ஒவ்வொரு அங்குலம் அங்குலமாக ஜோந்தார்மினரால் சல்லடை போடப்பட்டது.
இதன் தொடர்ச்சியரக இன்று காலை 350வது பிராந்திய சாலையின் ஓரத்தில் ஜோந்தார்மினரின் தொழில்நுட்பப்பிரிவினர் என்புகளைக் கண்டெடுத்துள்ளனர்.
இது ஆபத்தை உணரவைக்க, உடனடியாக மருத்துவ ஆராய்ச்சிகத்திற்கு இந்த என்பு எச்சங்கள் கொண்டு செல்லப்பட்டன.
ஆராய்ச்சியின் முடிவுகள் ஜோந்தார்மினரை ஆசுவாசப்படுத்தியுள்ளது.
அவை மனித என்புக் கழிவுகள் அல்ல என்றும், அவை காட்டு விலங்கின் என்புகள் எனறும், மருத்துவ ஆய்வகம் தெரிவித்துள்ளது.
இதனை இந்த சிறுமி காணாமற்போன கிராமம் அடங்கிய மாவட்டமான சவேர்ன் (Saverne) இன் நீதியரசர் அலின் கிளேரோ உறுதிப்படுத்தி உள்ளார்.