Paristamil Navigation Paristamil advert login

தமிழக வீரரின் கடைசி உலகக்கோப்பை.... வெளியாகிய தகவல்

தமிழக வீரரின் கடைசி உலகக்கோப்பை.... வெளியாகிய தகவல்

1 ஐப்பசி 2023 ஞாயிறு 08:13 | பார்வைகள் : 5454


தமிழக வீரர் அஸ்வின் இது இந்தியாவுக்கான தனது கடைசி உலகக்கோப்பையாக இருக்கலாம் என கூறியுள்ளார்.

இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 5ஆம் திகதி தொடங்குகிறது. 

இந்தியாவுக்கான அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலில் இடம்பெறாதது கேள்விகளை எழுப்பியது.

ஆனால், ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட ஆல்-ரவுண்டர் வீரர் அக்சர் படேல் காயம் காரணமாக விலகினார்.

இதனால் அவருக்கு பதிலாக அஸ்வின் அணியில் இடம்பிடித்தார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அஸ்வின், 'வாழ்க்கை ஆச்சரியங்கள் நிறைந்தது, நான் இங்கே இருப்பேன் என்று நான் நேர்மையாக நினைக்கவில்லை. 

அணி நிர்வாகம் காட்டிய நம்பிக்கையும்,சூழ்நிலையும் என்னை உறுதிப்படுத்தின.

இன்று நான் இங்கே இருக்கிறேன். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக விளையாட்டை ரசிப்பதே எனது முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.

அதையே நான் இந்தப் போட்டியில் செய்வேன். 
என்னைப் பொறுத்த வரையில், நல்ல இடத்தில் இருப்பதும், விளையாட்டை ரசிப்பதும் என்னை நல்ல நிலையில் வைத்திருக்கும். 

இதை நான் தொடர்ந்து கூறி வருகிறேன், அதாவது இந்தியாவுக்கான எனது கடைசி உலகக்கோப்பை இதுவாக இருக்கும்' என தெரிவித்துள்ளார்.     

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்