இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளிர உள்ள ஈஃபிள் கோபுரம்!
1 ஐப்பசி 2023 ஞாயிறு 09:06 | பார்வைகள் : 4730
ஈஃபிள் கோபுரம் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இளஞ்சிவப்பு (rose) நிறந்தில் ஒளிரவிடப்பட உள்ளது. ஆண்டு தோறும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வாக இடம்பெறும் இந்த நிகழ்வு, இவ்வருடத்தில் ஒக்டோபர் 1 ஆம் திகதி இன்றைய தினம் இடம்பெற உள்ளது.
2014 ஆம் ஆண்டில் இருந்து இந்த விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்று வருகிறது. மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், அது குறித்த தெளிவுடன் இருக்கவேண்டும் எனவும் இந்த ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். Arc de Triomphe மற்றும் தேசிய பாராளுமன்ற கட்டிடத்துக்கும் முன்பாக பல சுவரொட்டிகள், பெரும் திரைகளில் மார்பக புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் காணக்கூடியதாக இருக்கும்.
அதேவேளை, அமைதிப்பேரணி ஒன்றும் இன்று மாலை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதையடுத்து, ஈஃபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளிரவிடப்பட உள்ளன.
பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் 61,000 பேர் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்படுவதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.