மூட்டைப் பூச்சி விவகாரம் : தொழிற்சங்கத்தினருடன் சந்திப்பு!

1 ஐப்பசி 2023 ஞாயிறு 09:08 | பார்வைகள் : 10705
பொது போக்குவரத்துக்களில் மூட்டைப் பூச்சி தொல்லை அதிகரித்துள்ளதாக தொடர்ச்சியாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், அடுத்த வாரம் அரசாங்கத்துக்கும் தொழிற்சங்கத்தினருக்கும் இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது.
பிரான்சின் பொது போக்குவரத்து அமைச்சர் Clement Beaune, LCI தொலைகாட்சிக்கு வழங்கிய நேர்காணலில், அடுத்த வாரம் போக்குவரத்து இயக்குனர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினருடன் சந்திப்பு ஒன்றை நிகழ்த்த உள்ளோம் என தெரிவித்தார்.
மூட்டைப் பூச்சி மிகவும் ஆபத்தானது எனவும், புறநகரங்களில் இருந்து தினமும் 3.6 மில்லியன் பேர் பரிசுக்கு வந்து செல்கின்றனர். மூட்டைப்பூச்சிகள் அவர்களுடன் பிரான்ஸ் முழுவதும் பரவும் அபாயம் உள்ளது. எனவே அவற்றை அடியோடு அழிக்கும் திட்டமொன்றை ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற உள்ள நிலையில், பொதுபோக்குவரத்துக்களில் மூட்டைப் பூச்சி விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதற்குள்ளாக மூட்டைப்பூச்சிகள் அழிக்கப்படும் எனவும், அதன்பின்னர் எப்போதும் அவை திரும்பி வராது எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025