Paristamil Navigation Paristamil advert login

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ வெளியானது ..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ  வெளியானது ..!

1 ஐப்பசி 2023 ஞாயிறு 09:21 | பார்வைகள் : 2145


பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு தொடங்க இருக்கும் நிலையில் இந்த சீசனின் முதல் புரமோ சற்றுமுன் விஜய் டிவியின் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியுள்ளது

இதில் கமல்ஹாசன் தோன்றி ’வீடு இரண்டாகி விட்டது, விதிகளும் மாறிவிட்டது, விளையாட்டும் மாறப்போகுது’ என்று கூறும் காட்சிகள் உள்ளன. மேலும் பிரம்மாண்டமான அரங்குகளில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிவிட்டால் ஒவ்வொரு நாளும் மூன்று புரமோ வீடியோக்களை விஜய் டிவி வெளியிட்டு வரும் நிலையில் இன்று முதல் நாள் முதல் புரோமோவே அசத்தலாக உள்ளதால் இந்த சீசனுக்கு எதிர்பார்ப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த சீசனில் 20 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் இரண்டு வீடுகளில் ஒவ்வொரு வீட்டிலும் 10 போட்டியாளர்கள் இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இதுவரை இல்லாத வகையில் இந்த சீசன் சற்று வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்